Singathology

Home > Other > Singathology > Page 41
Singathology Page 41

by Gwee Li Sui


  “ஆமா…! நானும் பார்த்தேன். நேற்று அது வாயில் பச்சத் தண்ணீகூட படலே…! குலைப் பட்டினியாகக் கிடந்துச்சு! ‘அதுக்குக் காரணம் அண்டக்காக்கையாகத்தான் இருக்கும்’னு நினைக்கிறேன். அதுதான் கண்டகண்ட இடங்களுக்குப் போகும். கண்டதில் வாயை வைக்கும். அப்படித் தின்னுட்டு வந்ததைத்தான் கிழக்கிளியிடம் கக்கி இருக்கும்…!”

  “அது கக்கியதுதான் கிழக்கிளிக்குச் செரிமானம் ஆகாமல் இருக்கும்…! வாங்க பொந்துகுள்ளேயே முடங்கிக் கிடக்கும் அதைப் போய்ப் பார்ப்போம்...!”

  எல்லா இளங்கிளிகளும் கிளைகளில் இருந்து பறந்து சென்று கிழக்கிளியின் பொந்து உள்ள மரத்தில் தொற்றிக்கொண்டன. ஓர் இளங்கிளி பொந்து வாசலை அடைந்ததும் திரும்பிப் பார்த்தது.

  “என்ன திரும்பிப் பார்க்கிறே...? உள்ளே போய்ப் பார்...!”

  “ஆமா…! போய்ப் பார்…!” என்று அதைப் பார்த்துக்கொண்டிருந்த கிளிகள் உற்சாகம் மூட்டின. அதுவும் உற்சாகம் அடைந்தது. உள்ளேயும் சென்றது.

  ஒரு மூலையில் இரங்கத்தக்க நிலையில் குந்தி இருந்த கிழக்கிளியைப் பார்த்தது. அதைப் பார்த்ததும் இளங்கிளியின் மனமும் இரங்கியது. மெதுவாக, “எப்போதும் பொழுது புலர்வதற்கு முன் வெள்ளென எழுந்து வெளியே வந்து விடுவாயே…! இன்றைக்கு ஏன் இவ்வளவு நேரம் ஆகியும் வெளியே வரலே...? சரி வா போகலாம்…!” என்று சொல்லியபடி கிழக்கிளியின் ஓர் இறக்கையைத் தம் சிவப்பு நிற மூக்கால் பற்றித் தூக்கியது.

  இளங்கிளியின் அன்பையும், பரிவையும் மனத்தில் ஏந்திய கிழக்கிளி அதைக் கூர்ந்துப் பார்த்தபடி எழுந்தது.

  “என்னை ஏன் இப்படிப் பார்க்கிறே...? இதற்கு முன் பார்த்தது இல்லேயா...?” என்று இளங்கிளி சிரித்தபடி கேட்டது.

  ஆனால், கிழக்கிளியின் அலகுகள் அசையவில்லை.

  “சரி! கிளம்பு…!” என்றது இளங்கிளி.

  கிழக்கிளி அதற்கும் வாய் திறக்கவில்லை. பொந்தை விட்டு வெளியே வந்து வாசலில் நின்றது. காலை இளம்பரிதியின் கதிரொளியில் வெளி உலகைப் பார்த்தது. ஆனால், அது மனத்தில் ஒளி பரவவில்லை.

  “நம்ம கிழக்கிளி வந்திடுச்சு…! நம்ம கிழக்கிளி வந்திடுச்சு…!” என்று இளங்கிளிகள் உற்சாக மேலீட்டால் கத்தியதுகூட அது காதில் விழவில்லை. அது எதையோ பறிகொடுத்ததைப் போல் தன்னை மறந்து பொந்து வாசலிலேயே நின்றது.

  ஒரு கிளி, “ஏன் பொந்து வாசலிலேயே குந்தி நிற்கிறே...? இங்கே வா …! எங்ககூடச் சேர்ந்துகொள்…!” என்றது.

  “ஏன் இவ்வளவு நேரம் வெளியே வராமல் இருந்தே…? நாங்க என்னமோ ஏதோனு பதறிவிட்டோம்... !” என்றது இன்னொரு கிளி.

  “ஆமா…! நாங்க பயந்தே போய்விட்டோம். நம்ம கிளிக்கூட்டத்தில் உள்ள ஒரு குறும்புக் கிளிகூட உன்னை, ‘பொந்துக்குள் ஒரே அடியாய்த் தூங்கிடுச்சு போலிருக்கு’னு வாய் கூசாமல் சொல்லிடுச்சு …! நாங்க துடித்துவிட்டோம்…!” என்றது மற்றொரு கிளி.

  அது சொல்லியதைச் செவிமடுத்ததும் கிழக்கிளியின் முகம் சுருங்கியது. உள்ளம் வெதும்பியது. ‘நெல்மணியில் பதறு கலந்து இருப்பதைப் போல நம்ம கிளிக் கூட்டத்திலும் ஒன்று இரண்டு பதர்கள் கலந்துதாம் இருக்கு’ என்று அது உணர்ந்து இருந்தாலும், “நானும் ஒரே அடியாய்த் தூங்கிடலாம்னுதான் நினைக்கிறேன்…!” என்றது.

  அது இப்படிச் சொல்லியதும் எல்லாக் கிளிகளும் அதிர்ச்சி அடைந்தன.

  வாய் தவறிச் சொல்லிய அந்த இளங்கிளியும் வருந்தியது.

  “என்னை மன்னிச்சிடு…! நான் இப்படிச் சொல்லி இருக்கக் கூடாது…!” என்றது

  “நீ ஏன் மன்னிப்பு கேட்கிறே…? நீ சொல்லியதில் என்ன தப்பு இருக்கு? எனக்கும் வயசு ஆயிடுச்சு! இனி நான் இருக்கிறதும் ஒண்ணுதான் இல்லாததும் ஒண்ணுதான்…!” என்றது.

  எல்லாக் கிளிகளும் மீண்டும் அதிர்ச்சி அடைந்தன.

  அவற்றுள் ஓர் இளங்கிளி, “உனக்கு அப்படி என்ன பெரிய வயசு ஆயிடுச்சு? உன்னைவிட அகவை முதிர்ந்த கிளிகள் இருக்குதுங்களே...? நீ ஏன் இப்படிப் பிதற்றுறே...? நீ நூறு வயது வரைக்கும் வாழ்வே…! நல்லா இருப்பே…! இருக்கணும்…!” என்றது.

  இன்னொரு இளங்கிளி, “நீ எதையோ மனத்தில் வைத்துக்கிட்டுத்தான் இப்படிப் பிதற்றுறே
…! அண்டங்காக்கை வந்து அப்படி என்னதான் சொல்லிட்டுப் போச்சு...? சொல்லு…! நாங்க அதை உண்டு இல்லேனு பண்ணிடுறோம்…!” என்றது.

  “அது ஒண்ணும் சொல்லலே!”

  “அது ஒண்ணும் சொல்லலேனா நீ ஏன் அலகில் பச்சைத்தண்ணீகூடப் படாமல் இருக்கிறே...? அது வந்துட்டுப் போன பிறகு நீ காய் கனிகளைக்கூட சீந்திப் பார்க்கலேயே ஏன்...?”

  உடனே இன்னொரு கிளி, “வெறும் வயிற்றோடு இருக்கக் கூடாதுனு உனக்குத் தெரியாதா...? வா... வந்து காய் கனிகளைத் தின்னு…!” என்றது.

  மற்ற கிளிகளும், “வா போவோம்…! வா போவோம்…!” என்று விளித்தன.

  கிழக்கிளியால் தட்டிக்கழிக்க முடியவில்லை. “சரி போவோம்…!” என்று சொல்லிவிட்டு இறக்கைகளை ‘படபட’ என்று அடித்துக்கொண்டு மேலெழுந்தது. எல்லாக் கிளிகளும் மேல் எழுந்து அது பறப்பதற்கு ஏற்ப மெதுவாகவே பறந்தன.

  சிறிது தொலைவு சென்றதும் காயும் கனியுமாக நிற்கும் நாவல் மரம் தெரிந்தது.

  அந்த மரத்தைப் பார்த்ததும் எல்லா இளங்கிளிகளின் பார்வையும் கிழக்கிளி மேல் விழுந்தது. பறந்துகொண்டே கிழக்கிளியைக் கவனித்தன. அந்த மரத்தைப் பார்த்தால் கிழக்கிளி என்ன சொல்லும் என்று அந்த இளங்கிளிகளுக்குத் தெரியும். ஆனால், அன்று கிழக்கிளி ஒன்றும் சொல்லவில்லை.

  எல்லா இளங்கிளிகளும் வியப்புற்று:

  “இந்த மரத்தைப் பார்த்துவிட்டால் ‘இது பெரியகொக்கு நட்ட மரம்! அது நட்ட நாவல் கன்றுதான் இப்ப இப்படி வளர்ந்து நமக்குக் காய் கனிகளைக் கொடுக்குது’னு சொல்லுவீயே…! வானத்தில் குட்டிக்கரணம் அடித்துப் பறப்பீயே…! இன்றைக்கு ஏன் வாயை மூடிக்கிட்டுப் பறந்து வருறே...?” என்று ஒரு கிளி கேட்டது.

  இன்னொரு கிளி, “இந்த மரத்தைப் பார்த்ததும் உன்னையே நீ மறந்து விடுவாயே …! ‘பெரிய கொக்கு நட்ட மரம்’னு பெரிதாகப் பாராட்டுவாயே…! இன்றைக்கு ஏன் வாயே திறக்கலே...?” என்று கேட்டது.

  ஆனால், கிழக்கிளி அதைக் காதிலேயே வாங்கிக்கொள்ளவில்லை. சோகத்தைச் சுமந்தபடி பேசாமல் பறந்து சென்றது.

  எல்லா இளங்கிளிகளும் மரத்தை நெருங்கின. அவற்றுக்கு முன்பே பல வண்ணப் பறவைகள் அந்த மரத்தைச் சூழ்ந்து இருந்தன. பாடிப் பறந்து பறந்து கனிகளைத் தின்று களித்தன. அந்தக் காட்சியைப் பார்த்தபடியே இளங்கிளிகள் கிளைகளில் அமர்ந்தன. பனி தோய்ந்த நாவற் பழங்களை அருகில் சென்று பார்த்ததும் வாய் ஊறியது. பார்த்துப் பார்த்து, பறந்து பறந்து பழங்களைக் கொத்தித் தின்றன. ஆனால், கிழக்கிளி அந்த இளங்கிளிகளோடு சேர்ந்து பழங்களைத் தின்னவில்லை. மெதுவாகப் பின்வாங்கியது. இடைவெளி நீண்டதும் ‘மற்ற கிளிகள் தம்மைக் கவனிக்கின்றனவா’ என்றும் நோட்டமிட்டது. ஆனால், எந்தக் கிளியும் அதைக் கவனித்ததாகத் தெரியவில்லை. அவை பசித்த வயிறுகளை நிரப்புவதிலேயே குறியாக இருந்தன. ‘இதுதான் சரியான நேரம்’ என்று கிழக்கிளிக்குத் தோன்றியது. அந்த இளங்கிளிகளின் கண்களில் மண்ணைத் தூவி விட்டு அதே மரத்தின் அடிக் கிளையில் போய் தனியாக அமர்ந்தது. காற்றும் ‘சிலுசிலு’வென்று வீசியது. அதன் கொண்டையில் உள்ள மெல்லிய இறகுகள் காற்றில் அசைந்தாடின. ஆனால், கிழக்கிளி ஆடவில்லை, அசையவுமில்லை. அண்டங்காக்கை வந்து அவிழ்த்துவிட்டுப் போனதையே அசை போட்டுக்கொண்டு இருந்தது. மனத்தையும் அழுத்திப் பிழிந்தது. தன்னை அறியாமல் தலையை வலம் இடமாகவும் ஆட்டியது. அலகுகள் ‘படபட’வென அடித்துக்கொண்டன. அதனால் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அது கன்னங்களில் உருண்டு தரையில் கிடந்த நாவல் கொட்டையை நனைத்தது.

  அது கண்ணீர் சிந்துவதை இளங்கிளிகள் பார்க்கவில்லை. அவை நாவல் பழங்களைச் சுவைப்பதிலேயே நாட்டமாக இருந்தன.

  ஆனால், மர உச்சியில் இருந்த ஓர் இளங்கிளி மட்டும் தற்செயலாகப் பார்த்துவிட்டது. ‘நம்ம கிழக்கிளியைப் போல் இருக்கே’ என்று இலைதழைகளை அலகால் நீக்கிக்கொண்டு உற்றுப் பார்த்தது. ‘கிழக்கிளிதான்’ என்று உறுதியாகத் தெரிந்ததும் அதனால் அங்கு நிலைகொள்ள முடியவில்லை. பழங்களைப் பறித்துத் தின்னவும் மனம் இடம் கொடுக்கவில்லை. ‘இந்தக் கிழக்கிளிக்கு என்ன ஆச்சு...? இது ஏன
் அங்கே போய் தனியாக இருக்கு...?’ எனும் கேள்வி மனத்தில் எழுந்ததும் அங்கிருந்து கிளம்பியது. கிழக்கிளிக்கு அருகில் போய் அமர்ந்தது.

  அது வந்து ஒட்டி உரசிக்கொண்டு அமர்ந்ததைக்கூட கிழக்கிளி உணரவில்லை. அது ‘குர்’ என்று பேசாமல் குத்துக்கல்லைப் போல் இருந்தது.

  “ஏன் இங்கே வந்து தனியாகக் கண்ணைக் கசக்கிக்கிட்டு இருக்கிறே...? ”

  “ஒண்ணுமில்லே…!”

  “ஒண்ணுமில்லேனா ஏன் கண் கலங்கி இருக்கு...?”

  “கண்ணில் தூசி விழுந்திடுச்சு…!”

  “அப்படித் தெரியலேயே…!”

  கிழக்கிளிக்கு எரிச்சலாக இருந்தது.

  “அதான் ஒண்ணுமில்லேனு சொல்லிட்டேனே…! அப்புறம் ஏன் என்ன ஏதுனு என் உயிரை வாங்குறே…?” என்று கேட்டது.

  அது எரிந்து விழும் என்று இளங்கிளி எதிர்பார்க்கவில்லை. இருந்தாலும் கிழக்கிளியின் மனநிலையைப் புரிந்துகொண்டு, “ஒண்ணுமில்லேனா என் பின்னால் வா…!” என்றது.

 

‹ Prev