Book Read Free

Singathology

Page 60

by Gwee Li Sui


  ஆங், லீ லானின் தந்தை

  காட்சி 1

  சிங்காரம், சிந்தாமணி, அருண்:

  சிந்தாமணி: என்ன ஆச்சு உங்களுக்கு? கணக்கு பார்த்துக்கிட்டு உட்கார்ந்திருக்கிறீங்களா?

  சிங்கா: ஆமாம்.. சிந்தாமணி.. கணக்கு ஒண்ணா ரெண்டா?

  சிந்தா: எல்லாம் தெரிஞ்சதுதான்.. இப்ப எந்தக் கணக்கைப் பார்க்கிறீங்க?

  சிங்கா: இருபத்தஞ்சு வருஷத்துக்கு முன்னாடி என் தங்கச்சி சாரதா ரெண்டு வயசு மகன் அருணை நம்மக் கிட்டே ஒப்படைச்சி... கையிலே இருந்த இருப்பையெல்லாம் மகனுக்காகக் குடுத்துட்டு..

  சிந்தா: இப்ப எதுக்குங்க அந்த நினைப்பு? அருணை கண்ணுக்குக் கண்ணா வளர்த்து ஆளாக்கிட்டோம். நம்ம விமலாவும் வயசுக்கு வந்திட்டது..

  சிங்கா: அந்த யோசனை தான் சிந்தாமணி… நல்லபடியா கலியாணம் காட்சி நடக்கணும் இல்லியா?

  சிந்தா: ஆமாங்க..அது நம்ம கடமையாச்சே… அருண்கிட்டே முதல்லே பேசுங்க… நான் தேத்தண்ணி எடுத்துட்டு வர்றேன்….

  சிங்கா: பேசறேன். சிந்தாமணி….[தொடர்ந்து.]

  சிங்கா: அருண்..! அருண்..! [அழைப்பு.]

  அருண்: இதோ வந்துட்டேன் மாமா…

  சிங்கா: அவசரம் ஒண்ணும் இல்லியே? நாம கொஞ்சம் பேசலாமா?

  அருண்: சொல்லுங்க மாமா, எதுவா இருந்தாலும்…சொல்லுங்க!

  சிங்கா: எல்லாம் நம்ம விமலாவின் படிப்பைப் பத்தித் தான்.. அது படிச்சது போதும். படிப்பை நிறுத்திடலாம்னு பாக்கறேன்..

  அருண்: ஏன் அப்படி நினைக்கிறீங்க..மாமா.?. அது... எனக்கு.. எனக்கு..

  சிங்கா: விமலா பெரிய படிப்பு படிச்சிட்டு பெரும்பதவிக்கா போகப்போகுது..? நீ பட்டதாரியாகி பொறுப்பான வேலையை தேடிக்கிட்டே.. அது போதாதா, அருண்?

  அருண்: அதுக்காக விமலா படிப்பை எதுக்கு நிறுத்தணும்? அது நல்ல முடிவா எனக்குப் படலீங்க, மாமா.. விமலாவுக்கும் அது பிடிக்காது..

  சிங்கா: ம்.. இப்ப புரியிது அருண்! மனைவியும் பட்டதாரியா இருக்கணும்’ங்கிற ஆசையும் எதிர்பார்ப்பும் இந்தக் காலத்துப் பிள்ளைங்க எல்லாருக்கும்.. இருக்கு இல்லையா? நீயும் அது மாதிரி... [இழுப்பு.]

  அருண்: மாமா..நான் அதைச் சொல்ல வரலே.. நல்லா படிச்சுக்கிட்டிருக்கிற விமலாவை எதுக்காகப் பாதியிலே நிறுத்தணும்? அதுக்கு என்ன அவசரம் இப்ப?

  சிங்கா: மாப்பிள்ளையை காத்திருக்க வச்சிட்டு எவ்வளவு காலத்துக்கு மகளைப் படிக்க அனுப்புவே-ன்னு பலரும் கேக்க ஆரம்பிச்சுட்டாங்க, அருண்.. அவங்களுக்கு என்னால பதில் சொல்ல முடியலே..

  அருண்: நான் அப்புடிக் கேட்கலையே! இந்த யோசனையை முதல்லே நீங்க விமலாகிட்டே தான் கேட்டிருக்கணும் மாமா..

  சிங்கா: நீ சொல்றதும் சரிதான். ஆனா..காலா காலத்திலே நடக்கவேண்டியதை நடத்தணும்.. கடமைகளை முடிக்கணுங்கிற அக்கறை…கவலை தான் காரணம். அருண்..! விமலாவின் படிப்பு முடிகிற வரைக்கும் நீ காத்துக்கிட்டு இருக்கணுமே… அது மட்டுமில்லே.. உனக்கு நல்ல வேலை கிடைச்சி அடிக்கடி நீ வெளியூருக்கு போக ஆரம்பிச்சிட்டே…

  அருண்: மாமா.. எந்தக் கவலையும் இப்ப உங்களுக்கு வேண்டியதில்லே.. நீங்க கிழிச்ச கோட்டை நான் தாண்ட மாட்டேன்.. ஆனா மத்தவங்க மனசையும் விருப்பத்தையும் நீங்க…

  சிங்கா ம்..புரியிது. அருண்.. சீக்கிரமே.. நாம் நல்ல முடிவுக்கு வந்தாகணும்.. எல்லாம் நல்லபடியா நடக்கணும்..

  அருண்: சரிங்க மாமா.. நான் ஆபீசுக்குக் கிளம்பறேன்…

  சிந்தா அருண்.. தேத்தண்ணி.. இதைச் சாப்பிட்டுட்டு கிளம்பு.. இந்தாங்க.. உங்களுக்கு.. [தொடர்ந்து தனக்குள்.] ம்.. ரெண்டுபேரும் பேசினதைக் கேட்டுக்கிட்டுதான் இருந்தேன்.. அருண் சொன்னது போல விமலாகிட்டே பேசியாகணும்.. பாக்கலாம்.

  காட்சி 2

  சிங்காரம், சிந்தாமணி, விமலா:

  சிந்தாமணி: விமலா.. விமலா..! [அழைப்பு.]

  விமலா: கூப்பிட்டீங்களாம்மா? இங்கே தானே இருக்கேன்..சொல்லுங்கம்மா..

  சிந்தா: நல்லநாளும் பெருநாள் திருநாளும் வந்துவந்து போய்க்கிட்டே இருக்கு..ஆனா.. நம்ம வீட்டுலே ஒரு மங்கல காரியம் எப்ப நடக்கும்னு…

  விமலா: மத்தவங்க கேக்கிறாங்க’ன்னு சொல்ல வர்றீங்க இல்லியாம்மா..? நான் படிப்பை நிறுத்தணும்.
.வேலை வெட்டி இல்லாமெ வீட்டிலேயே அடைஞ்சுக் கிடக்கணும்னு சொல்ல வர்றீங்க… இல்லியா?

  சிந்தா: விமலா..புதுசா என்னத்தைச் சொல்லிடப் போறேன்.. எல்லா நடப்பும் உனக்குத் தெரிஞ்சதுதான்..நல்லபடியா கலியாணம் காட்சி நடக்கணும் இல்லியா.. எனக்கும் உன் அப்பாவுக்கும் அந்தக் கவலைதான் இப்ப..

  விமலா: ம்.. நல்லாவே புரியிது..அருண் கிட்டே அப்பா பேசினதா கேள்விப் பட்டேன்..உங்க பங்குக்கு இப்ப என்னைச் சரிக்கட்ட நினைக்கிறீங்க.. நீ படிச்சது போதும், மேல் படிப்பு வேணாம், முறைப் பையனுக்குக் கழுத்தை நீட்டுன்னு சொல்றீங்க… ம்.. அப்பாவுக்கும் உங்களுக்கும் இதே நினைப்புதான் எப்பவும்..

  சிந்தா: விமலா..புதுசா எதைச் சொல்லப்போறேன்? எல்லாம் நீ அறிஞ்சதுதான்.. ஒரு நல்ல முடிவுக்கு நாம் வந்தாகணும்..

  விமலா: அம்மா!...[அழுத்தமாக.] காலம் மாறிப்போச்சு.. இப்ப நாம பழைய செம்பவாங் கம்பத்துவாசி அல்ல’ன்னு அப்பாவும் நீங்களும் எப்பவும் சொல்லிக்கிட்டு இருக்கிறீங்க..அதைப் புரிஞ்சிக்கிட்டு சொந்தக் கால்லே நிக்கணுங்கிறதுக்காகத் தான் நான்ப டிக்கிறேன்..படிச்சாதானே நல்ல வேலை கிடைக்கும்.. வேலை பாக்காம வீட்டிலேயே அடைஞ்சிக் கிடக்கவா முடியும்?

  சிந்தா: அப்ப உன் கலியாணம்…

  விமலா: அதுக்கு அவசரம் இல்லே…

  சிந்தா: வேலைக்குப் போற அருண் அதுவரைக்கும் காத்துக்கிட்டிருக்கணும்னு சொல்றியா, விமலா?

  விமலா: அருண்கிட்டே தான் அதை நீங்க கேக்கணும்.. சரி நேரம் ஆச்சு.. நான் கல்லூரிக்குக் கிளம்பறேன்…

  சிந்தா: போயிட்டு வா..விமலா.

  அமைதியைத் தொடர்ந்து..

  சிங்கா: சிந்தாமணி…என்ன யோசிக்கிறே..? அறையிலே ஒதுங்கி நின்னு ஒண்ணுவிடாமெ கேட்டுக்கிட்டுத்தான் இருந்தேன்.. .

  சிந்தா: ஆமாங்க..விமலா எப்பவும் இப்புடித்தான்..நீங்க அருணோட பேசினீங்க. அது ஒரு பக்கம்.. இது மறுபக்கம்.. விமலா பிடிகொடுக்காம பேசி வாயை அடைக்க வச்சிட்டது. ஆனா இவங்க ரெண்டுபேர் கிட்டேயும் மறுபடியும் பேசி வழிக்குக் கொண்டு வரணும்..

  சிங்கா: அது நம்ம கடமையாச்சே.. செய்ய வேண்டியதைச் செய்வோம், சிந்தாமணி.

  காட்சி 3

  சிங்காரம், சிந்தாமணி, பத்மாவதி

  பத்மா: செம்பவாங் சிங்காரம்… செம்பவாங் சிந்தாமணி… செம்பவாங்….

  சிங்காரம்: யாரு செம்பவாங் பத்மாவதி குரல் மாதிரி இருக்கே…யாருங்க வாசல்லே?

  சிந்தா: வாங்க வாத்தியாரம்மா!. பத்மாவதி டீச்சர் வரமாட்டாங்களா,. எப்ப வருவாங்க’ன்னு எதிர்பார்த்துக்கிட்டே இருந்தோம்..

  சிங்கா: பத்மாவதி டீச்சரா? வாங்க..வாங்க. செம்பவாங்கை மறந்து ஓரேயடியா பினாங்குவாசி ஆயீட்டீங்க.. இல்லியா?

  பத்மா: எல்லாம் உங்களுக்குத் தெரிஞ்சதுதானே? சொந்த பந்தம் உறவு.. கிளைகளை உதறிட்டு வரவா முடியும்? உங்க எல்லாரையும் பார்க்கணும்ங்கிற ஆவல்ல தான் வந்தேன்…

  சிந்தா: செம்பவாங் டீச்சரம்மான்னு நீங்க அந்த நாள்லேயே பேர் எடுத்தவங்களாச்சே..பழைய இடத்தை பாக்காமெ இருக்கவா முடியும்? நல்ல நேரத்தில தான் வந்திருக்கிறீங்க..

  சிங்கா: ஆமாங்க, பத்மாவதியம்மா! நீங்களும் இந்த யீஷீன்லே எங்களுக்குப் பக்கத்திலேயே ஒரு வீட்டை வாங்கியிருக்கணும்..அதைச் செய்யத் தவறிட்டீங்க...எட்டிப் போயிட்டீங்க.. கிட்டத்திலே இருந்தா அப்பப்ப ஆலோசனை உதவி ஒத்தாசை கிடைச்சிக்கிட்டிருக்கும்..ம்.. இப்பவாவது வந்தீங்களே…சந்தோஷம்..!

  பத்மா: எங்கேயிருந்தாலும் நான் உங்களுக்கு செம்பவாங் பத்மாவதிதான்.. எல்லாரையும் அப்பப்ப நினைச்சிக்கிட்டுத் தான் இருக்கேன்..இருப்பேன்.. செம்பவாங் மார்க்கெட், மரத்தாண்டவர் கோயில், பழைய பள்ளிக்கூடம்.. சினிமா தியேட்டர்.. இப்ப எதுவுமே அங்கே இல்லே..உங்களை மாதிரி எல்லா குடும்பமும் இடம் மாறிட்டதை நினைக்கிறப்ப.. [பெருமூச்சு.]

  சிங்கா: ம்.. எல்லாமே பழங்கதையா போச்சு… எதை மறக்க முடியும்? 50 வருஷமா தேசிய தினத்தைக் கொண்டாடிக்கிட்டிருக்கிறோம்.. நாம படிச்சிக்கிட்டிருந்த காலம் அது…ஆனா இப்ப..

  சிந்தா: ம்… பேரப் பிள்ளைங்களை ஊட்டி வளர்த்து பாலர் பள்ளிக்கு அனுப�
��ப வேண்டிய காலம்… ஆனா நம்ம வீட்டுலே இப்ப… [ஏக்கம்.]

  பத்மா: விமலா-அருண் கலியாணத்தை இன்னும் நடத்தலேங்’கிற கவலை உங்களுக்கு இருக்குமே… .

  சிங்கா: எல்லாம் உங்களுக்குத் தெரிஞ்சது தான்… நீங்க கதைகதையா அப்ப சொல்லுவீங்க..ஒரு கதையை மறக்காம மனசிலே பதிய வச்சிருக்கிறோம்…

  சிந்தா: நீங்க சொன்ன சாமுண்டி கதை.. உங்க குரல் எதிரொலிச்சிக்கிட்டே இருக்குங்க…அந்தக் கதை….

  நினைவுக்காட்சி..

  பத்மா: சாமுண்டியும் சிகண்டியும் வியாபாரிங்க… சாமுண்டி ஏராளமான சொத்து வச்சிருந்தார். ஆனால் நோய் அவரை வாட்டி வதைச்சிக் கிட்டிருந்தது.. மருத்துவ சிகிச்சைக்கு பணத்தை வாரிவாரி செலவு செய்தார்…

  சிந்தா: பாவம் சாமுண்டி! பிறகு அவர் என்ன செய்தாருன்னு சொல்லுங்க…

  பத்மா: சாமுண்டிக்கு மனைவி இல்லே..ஒரு மகன் மட்டும் இருந்தான். தானும் இல்லேன்னா பத்து வயது மகன் அனாதை ஆயிடுவானே’ன்னு அவருக்கு ரொம்ப கவலை..

 

‹ Prev